ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை  உற்பத்தியில் அசாம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு தேயிலை தொழிலாளர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் தேயிலைத் தொழில் துறை தொடங்கி 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஒரு சிறப்பு திட்டத்தை அம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்..

அதன்படி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மானிய விலையில் தேயிலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசு குறைந்த விலைக்கு தேயிலை வாங்கலாம் என்ற அறிவிப்பு மக்களுடைய மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.