சென்னையில் உள்ள ஒரு உள்ளூர் சலூன் கடைக்கு வந்த கொரிய நாட்டு சிறுவன் ஒருவன், நம்ம ஊர் ஸ்டைல் ‘சாம்பி’ எனப்படும் தலை மசாஜை பார்த்து மெய்மறந்து போன வீடியோ இப்போது இணையதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது. பொதுவாகவே வெளிநாட்டினருக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இங்குள்ள பழக்கவழக்கங்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

அந்த வகையில், சென்னையில் உள்ள ஒரு சிறிய முடிதிருத்தும் கடைக்கு சென்ற அந்த கொரிய சிறுவன், அங்குள்ள பார்பர் செய்யும் ஹெட் மசாஜை (Head Massage) மிகவும் விரும்பி அனுபவித்துள்ளான்.

 

View this post on Instagram

 

A post shared by Jung ae Um🇰🇷 living in India🇮🇳 (@wonny_brothers)

பார்பர் தனது கைகளால் தலையில் தாளம் போடுவது போல தட்டி மசாஜ் செய்த போது, அந்த சிறுவன் கொடுத்த ரியாக்ஷன்கள் பார்ப்பவர்களை அப்படியே ரசிக்க வைக்கிறது.

“இது என்ன புதுசா இருக்கே” என்பது போல ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே, அந்த மசாஜ் கொடுத்த சுகத்தில் கண்கள் செருக அந்த சிறுவன் ரசித்த விதம் இப்போது பலரையும் கவர்ந்துள்ளது. அந்த கியூட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “நம்ம ஊர் சலூன் கடை மசாஜுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.