அதிசயங்களில் ஒன்றை போல் இரட்டையர்களை தவிர்த்து ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பது பல இடங்களில்  நடந்துள்ளது. அதிலும் சினிமா பிரபலங்களைப் போன்று ஒரு நபர் இருந்தால் அவர் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகிவிடுவார். அப்படி தான் தற்போது சுதாகர் பிரபு என்பவர் வைரல் ஆகியுள்ளார். கொச்சியில் உள்ள பட்டாளம் சாலையில் டீக்கடை வைத்திருப்பவர் தான் சுதாகர் பிரபு.

இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது அந்த காணொளியில் சுதாகர் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றே இருக்கிறார். இவரை முதலில் பார்த்த கேரள நடிகரும் இயக்குனருமான நதிர்ஷா என்பவர் இவரை நிஜ ரஜினிகாந்த் என்றுதான் நினைத்ததாக கூறியுள்ளார்.