சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான காணொளியில் ஒரு அரசுப் பள்ளியின் பெண் முதல்வர் முழு குடிபோதையில் பள்ளிக்கு வந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். மேசையில் கால்களை வைத்து, தள்ளாடி, புரியாத நிலையில் படுத்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிநடத்த வேண்டிய ஒரு முதல்வர் இப்படி நடந்து கொள்வது பள்ளியில் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்? இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது பலரது கவனத்தை ஈர்த்து, கடுமையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்து சிலர், “இப்படிப்பட்டவர்கள் மாணவர்களுக்கு என்ன முன்மாதிரியாக இருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். மற்றவர்கள், “அரை பாட்டில் குடித்தாயா, முழு பாட்டில் குடித்தாயா?” என்று வேடிக்கையாக கருத்துகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பலர் இந்த முதல்வரின் பொறுப்பற்ற செயலை கண்டித்து, அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
