உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் உள்ள சந்த் முஸ்லிம் தாபா ஒன்றில், சமையல்காரர் ஒருவர் தந்தூரி ரொட்டிகளைச் செய்வதற்கு முன், அதன் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 57 வினாடி வீடியோவில், அந்த நபர் ரொட்டிகளை உருட்டி, அதனைத் தந்தூருக்குள் வைப்பதற்கு முன் அதன் மீதுத் துப்புவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த அருவருப்பான செயல் குறித்து அறிந்தப் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதையடுத்து, அலிகார் போலீஸ் உடனடியாகச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை கைது செய்துள்ளது. அலிகார் போலீஸார், “கூறப்பட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்த நபர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.

உண்மைகளைச் சரிபார்த்து மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர். பொது சுகாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்தக் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.