டெக்சாஸில் உள்ள ஒரு பர்கர் கடையில், ஆர்டர் தவறாக கொடுக்கப்பட்டதால் பெரிய சண்டை ஏற்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 5 அதிகாலை 3 மணிக்கு, சான் அந்தோனியோவில் உள்ள வாட்டபர்கர் கடையில், இரு குழுக்கள் ஆர்டர் குழப்பம் காரணமாக வாக்குவாதம் செய்து, பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர். வீடியோவில், மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து உதைப்பது தெரிகிறது. பாதிக்கப்பட்டவரின் தாய் ரெபெக்கா நோயல், ஃபேஸ்புக்கில் வீடியோவை பதிவிட்டு, “கடை ஊழியர்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல், வேறு வாடிக்கையாளர்களிடம் சொல்லி சண்டையைத் தூண்டினர்” என்றார்.

ஆந்த்ரெஸ், டைரோன், மிகுவல், மெய்லி, ஆந்த்ரூ, டியோன்டே, வெரோனிகா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதலில் ஒரு இளைஞருக்கு தலை, கை, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சண்டையைத் தொடங்கிய ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.