கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமை உறவான சித்தப்பா தனது மகளான  12ம் வகுப்பு மாணவியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து,  கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் வெளியாகி, அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கூலி  தொழிலாளியாக பணியாற்றும் தந்தையின் 17 வயது மகள், பிளஸ் 2 தேர்வை முடித்துவிட்டு, மேல்படிப்புக்காக வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில், ஒருநாள் திடீரென மயக்கமடைந்து விழுந்த  மாணவியை, அவசரமாக பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி மூன்று  மாத கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவி, தாயாரின் தங்கை கணவரான தேசலிங்கம் தான் வீட்டில் தனியாக இருந்த நேரங்களில் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த தகவலை உண்மையென உறுதி செய்த காவல்துறையினர், நபர் தேசலிங்கத்தை கைது செய்ததுடன், சிறப்பு குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இந்த அருவருக்கும் சம்பவம், சமூக ஒழுக்கத்தையும், குடும்ப உறவுகளின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது