HBOன் பிரபல வெப் சீரிஸ் ‘Euphoria’வின் நடிகர் ஏங்கஸ் கிளவுட்(25) காலமானார். அவரது மரணத்துக்கு காரணம் தெரியவில்லை. ஆனால், கிளவுட், தனது தந்தையின் சமீபத்திய மரணம் மற்றும் மனநல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எம்மி விருது பெற்ற யுபோரியா நாடகத்தில் போதைப்பொருள் வியாபாரியாக ஏங்கஸ் நடித்திருந்தார். நார்த் ஹாலிவுட், தி லைன், தி திங்ஸ் தே கேரிட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.