தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 210 கோடி வசூலித்ததாக வாரிசு பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் வாரிசு திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் வசூலில் சறுக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதேபோன்று தெலுங்கிலும் வாரிசு படம் ரிலீஸ் ஆகி இதுவரை 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வாரிசு படத்தின் வசூல் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.