சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவுக்கு சில நாட்களுக்கு முன் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றி ஆலியா மானசா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், அண்மையில் நடைபெற்ற கபடி போட்டி ஒன்றில் சிங்கப் பெண்கள் எனும் அணியில் தான் இடம்பெற்றேன். அந்த கபடி விளையாட்டின் போது தன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்துள்ள ஆலியா மானசாவை 1 மாத காலம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.