சமீபத்தில் காலமான நடிகர்கள் மயில்சாமி, கஜேந்திரன், மனோபாலாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, தனக்கு மிஞ்சினதுதான் தானம். ஆனால், மயில்சாமியை பொறுத்தவரை தானத்துக்கு மிஞ்சியதுதான் தனக்கு என்று வாழ்ந்தார். கடன் வாங்கிக்கூட தானம் செய்துள்ளார். தாராள மனம் படைத்த அவர் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மனம் திறந்து பேசினார்.

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) தமிழ் சினிமாவில்  நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இவர் உடல் நல குறைவால் கடந்த 19 ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.