உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 160 மொழிகளில் வெளியான நிலையில் ரூ. 18,534 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதனால் உலக அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

முதலிடத்தில் அவதார் திரைப்படமும், இரண்டாம் இடத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற படமும் இருக்கிறது. இந்நிலையில் அவதார்-2 ஜூன் 7 முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை, பல OTTகளில் அவதார்-2 வாடகை கட்டணம் செலுத்தி பார்க்க முடிந்தது. இனி இந்த படத்தை பயனர்கள் இலவசமாகப் பார்க்கலாம். எனினும், எத்தனை மொழிகளில் வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், மாயாஜாலம் நிறைந்த காட்சிகளாக இருந்தது.