கேரள மாநிலம் இடுக்கி பெருசேரி பகுதியில் ஆதிரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதில் அவ்யந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை குழந்தை அவ்யந்த் தன்னுடைய பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ரம்புட்டான் பழத்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கியது.

அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தொண்டையில் பழம் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதை தொடர்ந்து குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.