உத்தரப்பிரதேசம் லக்னோவிலுள்ள ஒரு தாபாவில் காவி  துணி அணிந்த ஒரு இளைஞர் அசைவ  உணவு சாப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கினார்.

“காவி கட்டிட்டு அசைவம்  சாப்பிட வர்றீங்கலா? மக்கள் மனசை மயக்கும் வேலை தான் பண்ண்றீங்களா?” என மற்றொரு நபர் அவரிடம் கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. அந்த இளைஞரை மற்ற வாடிக்கையாளர் ஒருவர் நடுத்தெருவில் மிரட்டியும் தாக்கியும் இருப்பது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

“>

 

இந்த சம்பவத்திற்கு பின்னர், தாக்கப்பட்ட இளைஞர் மீண்டும் தாபாவிற்கு திரும்பி, தன்னை தாக்கிய நபரை  கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“>

 

மத அடையாளங்கள் மற்றும் உணவு பழக்கங்களை மையமாகக் கொண்டு ஏற்படும் இந்த வகை தாக்குதல்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.