உத்தரபிரதேசம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் வெள்ள நிவாரண முகாமில் வழங்கப்பட்ட உணவு இப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

ஆனால், அதில் இறைச்சி துண்டுகள் மற்றும் எலும்புகள் இருப்பதை உணவு உண்ணும் போது சிலர் கண்டனர். சைவ உணவாகவே வழங்கப்படும் என எதிர்பார்த்த அவர்கள், இது மத உணர்வை புண்படுத்தும் செயல் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.

இந்த பிரியாணி, அந்த பகுதி கிராமத் தலைவர் மொஹமட் ஷமி மற்றும் அவரது மகன்கள் தாலிப், சைஃப் ஆகியோரால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

“>

 

சைஃப் மற்றும் மற்றொருவரை போலீசார் கைது செய்த நிலையில், கிராமத் தலைவர் மற்றும் மற்றொரு மகன் தப்பிச் சென்றுள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கையுடன் சோதனை முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.