லண்டன் மாநகரின் பொதுப் போக்குவரத்தான பேருந்துகள் மற்றும் ரயில்களில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் பெண்களை வைத்த கண் எடுக்காமல் முறைத்துப் பார்ப்பது (Staring), அவர்களைப் பின்தொடர்வது மற்றும் அநாகரீகமான முறையில் துன்புறுத்த முயற்சிப்பது போன்ற செயல்கள் பொது இடங்களில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
இது போன்ற சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அங்கு வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியையும் அச்சத்தையும் எழுப்பியுள்ளன. இந்தச் சூழ்நிலைக்கு லண்டனில் அதிகரித்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்களும் ஒரு முக்கியக் காரணம் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. முறையான ஆவணங்கள் இன்றி நகருக்குள் நுழையும் நபர்களால் கலாச்சாரச் சீரழிவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரிப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.
The current horrific situation of harassment against women in London.
Every day, undocumented illegal immigrants arrive in London. pic.twitter.com/DDnEVbTrbm
— Squint Neon (@TheSquind) January 4, 2026
பொது இடங்களில் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
