நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சில இடங்களில் தக்காளி விலை சதம் அடித்துள்ளது. இன்னும் சில இடங்களில் தக்காளி விலை ரூ.120-ஐ எட்டியுள்ளது. சமீபத்தில் தமிழகத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120-ஐ எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக அரசு கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்களுக்கு தக்காளி கிலோ ரூ.60க்கு கிடைக்க வழிவகை செய்துள்ளார். இதனை தொடர்ந்து மற்ற காய்கறிகளும் அரசு கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் குறைந்த விலையில் கிடைக்கும்.