இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தின் நினைவாக சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வேதுறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் 76வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 22ம் தேதி புறப்படும் சுற்றுலா ரயில், அகமதாபாத், கேவடியா, சூரத், புனே, ஷீரடி, நாசிக், ஜான்சி ஆகிய இடங்களுக்கு செல்கிறது. இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.31,731 வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியுள்ளது.