உத்தரப் பிரதேசத்தின் முஜஃபர்நகர் மாவட்டத்தில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பூஜா என்ற இளம் பெண், மாடர்ன் உடைகள் அணிந்து நகைகளுடன் ஜிம்முக்கு செல்லும் பழக்கம் வைத்திருந்தார். இது அவரது சகோதரி ரேகாவுக்கு பிடிக்கவில்லை. கோபமடைந்த ரேகா, தனக்குத் தெரிந்த கொள்ளையர்களைத் தொடர்பு கொண்டு, பூஜாவின் நகைகளைப் பறிக்க ஏற்பாடு செய்தார். அங்குர் என்ற கொள்ளையரை அழைத்து, பூஜாவின் இடத்தைத் தெரிவித்தார். அங்குர், தனது நண்பர்கள் வஞ்ச் மற்றும் வீர் சிங்குடன் சேர்ந்து, பூஜாவின் ஈ-ரிக்ஷாவைப் பின்தொடர்ந்து நகைகளைப் பறித்து தப்பினர். இந்தச் சம்பவம் கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சம்பவம் தெரிந்ததும், காவல் துறையினர் உடனடியாக விசாரணைத் தொடங்கியது. 12 மணி நேரத்திற்குள், வஞ்ச், அங்குர், வீர் சிங் ஆகிய மூன்று கொள்ளையர்களையும் கைது செய்து, பறிக்கப்பட்ட நகைகளான மீட்டனர். விசாரணையில், இது சகோதரிகளிடையான பகைமையால் நடந்தது எனத் தெரிந்த நிலையில் ரேகாவும் கைது செய்யப்பட்டார்.