சென்னையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெரியப்பா மகளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக அவர் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி வந்த நிலையில் அந்த பெண்ணை மும்பைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து ஆஸ் முகமது என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
