Facebook ப்ளூ டிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் ஆப்பிள் பயனர்கள் மாதம் 1,240 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் கட்டணம் வசூலித்து வருகின்றது. இது இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாகின்றது. இந்த நடவடிக்கை சமூக ஊடகப் பயன்பாடுகளில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை பயன்படுத்தும் என்று மெட்டா  தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க்  தெரிவித்துள்ளார்.