ட்விட்டரில் தற்போது திரை நட்சத்திரங்கள்,கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் என பலரும் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ப்ளூ டிக் வசதி பயன்படுத்துகின்றனர். இந்த ப்ளூ டிக்வசதியை தற்போது கட்டணம் செலுத்தி தான் பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் இந்த வசதி மேற்கொண்டவர்களுக்கு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது ப்ளூ டிக் பயனர்களின் கணக்கை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் விதமாக Two-Factor Authentication என்ற புதிய அம்சம் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. இதனை பயன்படுத்துவதற்கான எளிய வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு  முதலில் ட்விட்டர் செயலிக்கு சென்று Settings பகுதிக்குள் செல்ல வேண்டும்.

பிறகு  Security and account access என்பதை கிளிக் செய்து Security என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர்  Two-factor authentication என்பதை தேர்வு செய்தால் உங்களின் கணக்கில் இந்த வெரிஃபிகேஷன் முறை அமலாகும்.

இதில் நீங்கள் Text message, Authentication app, Security key ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்