நடிகை ரஷ்மிகாவின் DeepFake வீடியோ விவகாரத்தில் ஆந்திர இளைஞர் ஈமனி நவீன் (23) சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரஷ்மிகாவின் தீவிர ரசிகரான நவீன், அவருக்காக ஒரு ஃபேன் பேஜ் பக்கத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அந்த பேஜின் ஃபாலோயர் எண்ணிக்கையை உயர்த்த, ரஷ்மிகாவின் DeepFake வீடியோவை பதிவிட்டுள்ளார். பிரச்னை பெரிதானதால் அந்த வீடியோவை டெலிட் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.