திருவள்ளூர் மாவட்டத்தில் சரவணன் தீபா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில் மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மாலையில் வேலை முடிந்த வீட்டிற்கு திரும்பிய நிலையில் மாணவியின் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் அரையாண்டு நடைபெற்ற நிலையில் சமீபத்தில் தேர்வு பட்டியல் வழங்கப்பட்டது. இதில் சில பாடங்களில் மாணவி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.