ராஜஸ்தானில் திருமண குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் ம.பியில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு ஒரே வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் சென்ற 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.