இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்பிஐ வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் எனப்படும் புதிய வகை கடன் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு ஈடாக உற்பத்தி சந்நதைபடுத்துதல் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு பிராசசிங் கட்டணம் கிடையாது. அதோடு கூடுதல் பிணையங்களும் தேவைப்படாது. மேலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்பதால் விவசாயிகளுக்கு இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.