இந்தியாவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரி வாயிலாக மட்டுமே 70 சதவீத பங்களிப்பு இருக்கிறது. ஆனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதிய அளவு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் 2023-24 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் டன்னுக்கு மேல் நிலக்கரி உற்பத்தி செய்ய வேண்டும் என நிலக்கரி அமைச்சகம் இலக்கு நிர்ணயத்துள்ளது. இந்நிலையில் அனைத்து நிலக்கரி நிறுவனங்களுடனும் நிலக்கரித்துறை செயலாளர் ஆய்வுக்கூடம் நடத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிஐஎல் நிறுவனத்திற்கு 780 மில்லியனும், சிங்கரேனி நிறுவனத்திற்கு 75 மில்லியன் டன்னும், வர்த்தக சுரங்கங்களுக்கு 162 மில்லியன் டன்னும் நிலக்கரி உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஐஎல் நிறுவனத்திற்கு 290 நிறுவனங்கள் உள்ள நிலையில், 97 சுரங்கங்கள் வருடத்திற்கு ஒரு மில்லியன் டன்னுக்கு மேலான நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நிலக்கரி சுரங்கங்களில் உள்ள பிரச்சனைகளை நிவர்த்தி செய்து நிலக்கரி நிறுவனங்களின் உயர்நிலை மேலாண்மை குறித்து மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.