சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி விளையாடிய பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 19 வயது இளைஞர் கவின் சித்தார்த். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து சரக்கு ரயில் மீது ஏறி விளையாடி உள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மீது அவருடைய கை பட்டுள்ளது. இதனால் அடுத்த நொடியே மின்சாரம் உடலில் பாய்ந்து இவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.