வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜய்காந்த் நடிக்க இருப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்த அவர், “வெங்கட் பிரபு பலமுறை தன்னை சந்தித்து இதுகுறித்து பேசினார்.

எனக்கும் விஜய் மீதும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும் மிகுந்த மரியாதை இருப்பதால் நானும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டேன். கேப்டன் இருந்தால் இதை மறுக்க மாட்டார்” என கூறியுள்ளார்.