
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாத்தா முறை கொண்ட நாகேந்திரன் என்பவர் பேசியுள்ளார். அவர் புது துணி வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமியின் தாயும் நாகேந்திரனுடன் மகளை அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த தாய் தனது மகள் அழுது கொண்டிருந்தது கண்டு என்ன நடந்தது என கேட்டார். அப்போது சிறுமி பைக்கில் அழைத்து செல்லும் போது நாகேந்திரன் சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்கு பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என நாகேந்திரன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரண்டு புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நாகேந்திரனை கைது செய்தனர்.