தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதன் பிறகு வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் என அனைத்துமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் நாயகி ரஷ்மிகா மந்தனா படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு துள்ளி குதித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுது நிலையில், தற்போது படம் பார்த்து விட்டு ராஷ்மிகா மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Looks like our Ranjithame @iamRashmika celebrated #VarisuPremiere to her fullest 😍#BlockbusterVarisu#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @Lyricist_Vivek @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/egmfGcFWyH
— TheRoute (@TheRoute) January 11, 2023