தமிழ் சினிமா உலகில் இரு உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். நேற்று வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வம்சி இயக்கத்தில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இவர்களின் திரைப்படங்கள் தனித்தனியாக வந்தாவே திருவிழா போல் காட்சி அளிக்கும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை ஒட்டி இருவரின் திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றது. முன்னதாக வீரம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் இதே பொங்கல் பண்டிகையில் களமிறங்கினர். நேற்று வெளியான துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் ட்விட்டரில் #Thunivu, #Varisu ஹேஷ்டேகுகள் உலக அளவில் டிரெண்டாகி வருகின்றது.