திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.