இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் பாம்புகள் எப்போதும் மனிதர்களுக்குப் பயத்தையும் அதே நேரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக உலகிலேயே மிக ஆபத்தான விஷம் கொண்ட ராஜநாகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதன் பெயரைக் கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கிவிடும்.
ஆனால், அத்தகைய பயங்கரமான ராஜநாகம் ஒன்று, போதை தலைக்கேறிய மனிதனைப் போல உடலை ஆட்டி ஆட்டி விசித்திரமான முறையில் எதிர்வினையாற்றும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களை ஒரே நேரத்தில் சிரிப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கடித்துள்ளது.
சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வரும் இந்த வீடியோவில், அந்த ராஜநாகம் தனது வழக்கமான கம்பீரத்தையும் சீற்றத்தையும் மறந்து, நிலைதடுமாறி ஆடுவது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பொதுவாக மனிதர்கள் அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் தலையையும் உடலையும் கண்டபடி ஆட்டுவது போல, அந்தப் பாம்பும் தனது தலையை வெவ்வேறு கோணங்களில் அசைத்துச் சில விசித்திரமான எதிர்வினைகளை வெளிப்படுத்துகிறது.
விஷப்பாம்பின் இந்த எதிர்பாராத மற்றும் நகைச்சுவையான நடவடிக்கையைக் கண்ட நெட்டிசன்கள், “இது என்னப்பா பாம்புக்கு போதை ஏறிடுச்சா?” என்று கமெண்ட் பாக்ஸில் கிண்டலாகக் கேட்டு மீம்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் அறிவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பாம்புகளுக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது போதை உணர்வோ ஏற்படுவதில்லை. சூழலியல் ரீதியாக அவை தற்காப்பிற்காகவோ, பார்வைத் தெளிவின்மை காரணத்தினாலோ அல்லது ஏதேனும் நரம்பு மண்டல பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் போதோதான் இதுபோன்ற விசித்திரமான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும்.
இந்நிலையில் எது எப்படியோ, ஆபத்தான ராஜநாகத்தின் இந்தத் தமாஷான வீடியோ தற்போது சோஷியல் மீடியா பயனர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இணையத்தைக் கலக்கி வருகிறது.
साँप ने 70 वाला दारु का पव्वा पी लिया। pic.twitter.com/v7Xxw2UwI5
— Argumentor (@Mountain4u) August 20, 2026
“>
