பரந்தூர் மக்களின் 200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க செல்வோரை தடுத்து நிறுத்தி கைதுசெய்வது பாசிசத்தின் உச்சம் என சீமான் விமர்சித்துள்ளார். போராட்டத்தின் தொடக்க நிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது போல, மீண்டும் அம்மக்களை சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னை தடுத்து பார்க்கட்டும் என சீமான் சவால் விடுத்துள்ளார்.