தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த வருடமும் இதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் கல்வியாண்டின் இடையில் பணியிட மாறுதலை மேற்கொள்ளக்கூடாது என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

என் நிலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் மாதம் உபரியா ஆசிரியர்களுக்கான இந்த பணியிட மாறுதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.