கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெண்ணார் புட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்நிலையில் இறுதி போட்டியில் காவேரிப்பட்டணம் அணி, ஓசூர் அணி விளையாடியது.

இதில் காவேரிப்பட்டணம் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ஓசூர் அணி 2- ஆம் இடமும், தஞ்சாவூர் அணி 3- ஆம் இடமும், கள்ளக்குறிச்சி அணி 4-வது இடத்தையும் பிடித்தது. பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் பெயர்ச்சியாளர் வெற்றி, முருகன், முல்லைவேந்தன், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.