மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் நாளொன்றிற்கு 2.3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றும் சராசரியாக நாளொன்றுக்கு 2.2 லட்சம் பேர் முதல் 2.3 லட்சம் பேர் வரை பயணிக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 15 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 208 பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.