அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கு 2022 மே மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த டிச. 24 ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வுகள் வரும் ஜன.19-ஆம் தேதியும், டிச. 31ல் நடைபெறவிருந்த தோ்வுகள் ஜன,.20ம் தேதியும் நடைபெறவுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.