கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான skilled artisan பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்துக் கொள்ள வரும் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை இதற்கு விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளவும்.

பணி: skilled artisan

காலி பணியிடங்கள்: 7

துறைவாரியான காலி பணியிடங்கள் விவரம்.

1. M.V mechanic-4
2. M.V electrician-1
3. Copper & tinsmith-1
4. Upholster-1

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் தொடர்புடைய துறைகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.வி மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழில்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: https:// www.indiapost.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை எண் 37, கிரீம்ஸ் சாலை, சென்னை 6006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 9.1.2023