மதுரை முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்   புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலுக்கு உள்ளே மின்னனு  சாதனங்களை கொண்டு செல்ல ஏற்கனவே தடை உள்ள நிலையில்,  சில தனியார் நிறுவனங்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் நிறுவனம் ஒப்பந்த முறையில் அனுமதி அளித்துள்ளது .  அந்த தனியார் நிறுவன புகைப்பட கலைஞர்கள் உள்ளே சென்று புகைப்படம்  மற்றும் வீடியோ எடுப்பதுடன், அவற்றை  சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  புகைப்படம் எடுக்கவோ, அதனை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை கிடையாது என்று   உத்தரவிட்டுளளது. கோவிலுக்குள் மற்றும் வீடியோக்களை நீக்கக் கோரிய வழக்கில், “அமெரிக்கா போன்ற நாடுகளில் புராதன அனுமதியின்றி எடுக்கப்பட்ட போட்டோக்கள் சின்னங்களை போட்டோ எடுத்து பல கோடிக்கு விற்கின்றனர். நாம் வீணடிக்கிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.