சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் வசிக்கும் கோதை என்பவரது whatsapp எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி கோதை அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்துள்ளார். இதனையடுத்து ஒரு வங்கி கணக்கிருக்கு பணம் செலுத்தினால் வேலை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி பல்வேறு தவணைகளாக கோதை 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.
அதன் பிறகும் வேலைவாய்ப்பு தொடர்பான எந்த தகவலும் வரவில்லை. இதே போல் நடேசன் என்பவரும் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு கொடுப்பதாக வந்த குறுந்தகவலை நம்பி 13 லட்சத்து 23 ஆயிரம் வரை செலுத்தி ஏமாற்றம் அடைந்தார். இது தொடர்பாக நடேசனும், கோதையும் தனித்தனியாக சேலம் மாணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.