இந்தியாவில் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இதற்கு தற்போது பத்திரிகையாளர் குழு அதிருப்தி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐடி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய விதிமுறைகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு டிஜிட்டல் துறையினருக்கு விதிகளை வகுப்பதற்கு பத்திரிக்கை துறையினர், ஊடகங்கள் அதன் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். போலி செய்திகள் என்று முடிவு செய்வதில் மத்திய அரசின் கைகளில் ஒன்றுமே கிடையாது. இப்படி செய்வதன் மூலம் ஊடகங்களை தணிக்கை செய்வதில் கொண்டு விட்டு விடும். ஒரு செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய ஏற்கனவே பல்வேறு சட்டங்கள் இருக்கிறது. ஆனால் தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய சட்டங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பது போன்று இருக்கிறது. மேலும் அரசுக்கு சிக்கல் என கருதப்படும் செய்திகளை ஆன்லைன் மீடியோக்களில் இருந்து நீக்குவதற்கு ஊடகங்களை கட்டாயப்படுத்துவதற்கு வழி வகுத்து விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.