கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறை பருத்தி கோட்ட விளை பகுதியில் பீட்டர் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜின் பிரகாஷ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த பிரகாஷ் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பிரகாஷை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளித்து வந்தனர்.

எனவே பிரகாஷ் வீட்டில் இருந்தபடியே பெற்றோரின் கண்காணிப்பில் மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்று போதை பொருட்கள் வாங்க முடியாமல் தவித்த பிரகாஷ் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.