தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் இன்று  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இதுவரை 1,87,693 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான ரேண்டம் எண் இன்று  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே நிலையில் இருந்தால் அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் நோக்கில் வேண்டாம் எண் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நான்கு சுற்றுகளாக நடைபெற உள்ளது.