சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா கோட்டை கிராமத்தில் கருப்பர் சுவாமி கோவிலில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோகுல கிருஷ்ணா யாதவா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அறக்கட்டளை சார்பாக கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த ஆறு மாணவ, மாணவியர்களுக்கு மற்றும் சங்க உறுப்பினர்களின் 12 மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ்கள் மற்றும் கல்வி ஊக்கத் தொகையாக தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் விளையாட்டுப் போட்டிகளில் 9 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விழாவில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் இறந்த உறுப்பினர் குருநாதன் குடும்பத்திற்கு ரூ.25,000 ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காசி தலைமையிலும், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் துரைராஜன் முன்னிலையிலும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அறக்கட்டளை செயலாளர் சுந்தரம் கூறியதாவது, விரைவில் சேவா சங்கத்தின் 25 -ஆவது ஆண்டு வெள்ளி விழா நடத்துவது எனவும் வெள்ளி விழாவில் சாதனை பொக்கிஷமலர் வெளியீடு செய்ய இருப்பதாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.