ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சத்தில் பேருந்து ஓட்டுனர் சற்று தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டார். சிலர் செல்போனில் யானையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த யானை பேருந்தை துரத்தி வந்தது. இதனால் ஓட்டுனர் பேருந்து பின்னோக்கி இயக்கியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் யானை அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.