சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, தினமும் இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு, காலை 6.55 மணியளவில் சென்னைக்கு வந்து சேரும். நேற்று முன்தினம் இரவு குவைத்தில் இருந்து சென்னைக்கு அந்த பயணிகள் விமானம், 158 பயணிகளுடன், புறப்பட தயாரானது. அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து அதை சரி செய்து இரவு 11.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமானதால்,  நள்ளிரவு 11.51 மணியளவில், குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.  அதன்பின்னர்  அந்த விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருக்கும்போது, மீண்டும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இது தொடர்பாக  விமானி உடனேடியாக, சென்னை மற்றும் குவைத் விமான கட்டுப்பாட்டு அறைகளுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, விமானத்தை மீண்டும் குவைத்துக்கே திருப்பிச் சென்று தரையிறக்குமாறு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள்,  உத்தரவிட்டனர். உடனே  விமானம்  குவைத் விமான நிலையத்தில் தரை இறங்கியதும், என்ஜினீயர்கள் பழுதை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.