
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி சார்பாக மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கணேசன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆணையாளர் கூறியதாவது, புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதை பெரியவர்களுக்கு மாணவர்கள் எடுத்துக் கூற வேண்டும். இதனை பெற்றோர் தெரிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும். மேலும் நகராட்சி பணியாளர்களிடம் தேவையற்ற பொருட்களை ஒப்படைப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.