பி எட் சிறப்பு கல்வி கணினி வழியில் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பி எட் சிறப்பு கல்வி சேர்க்கைக்கான கணினி வழி நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது